| Main page Recent changes | Edit History | |
news2016jun | ||
|---|---|---|
|
This revision is from 2016/06/09 09:35. You can Restore it. திருநெல்லி விதை திருவிழா: கேரளாவில் உள்ள வயநாட்டில் "திருநெல்லி விதை திருவிழா" கடந்த மே 27/28 நடந்தது. தனல் குழுவும், நமது நெல்லை காப்போம் இயக்கமும் திருநெல்லி பஞ்சாயத்துடன் இணைந்து நடத்திய ஒரு விதை திருவிழாவாஅகும் இது. கேரளத்தில் பஞ்சாயத்துக்கள் இது போன்ற மக்களது (அதுவும் விவசாயிகளின்) விழாக்களில், நிகழ்வுகளில் பங்கேற்பது புதிதல்ல என்பது பார்க்கவேண்டிய ஒன்று. முன்பே நாம் பார்த்தோம் 'பசுமை போராளிகள்' என்னும் கட்டுரையில், எப்படி அந்த வடக்கன்சேரி பஞ்சாயத்தும் அதன் தலைவரும் முன்னின்று அந்த பெரு பணியை எடுத்திச்சென்றனர் என்றும், அதனை தொடர்ந்து பல பஞ்சாயத்துக்களும் பின்னர் தம் நிதியிலிருந்து பல விதமான உதவிகளையும் செய்தனர் என்று! அப்படி தான் இங்கு இந்த விதை திருவழாவை ஆரம்பித்த தனல் மற்றும் நமது நெல்லை காப்போம் ஆர்வலர்கள், பஞ்சாயத்திடம் இந்த நிகழ்வை முன்னின்று நடத்த விட்டனர். அவர்களும் காட்டிகுளம் என்னும் ஊரின் பேருந்து நிலையத்திலேயே இடமும் நிதியும் கொடுத்து மிக சிறப்பாக கொண்டாடினர். கேரளத்தில் மிகவும் பிரபாலமான குடும்பஷ்ரீ பெண்கள் குழுவும் ஈடுபட்டனர். அதனாலேயெ ஒரு சிறிய பஞ்சாயத்து நகரத்தில் நடந்த இந்த விழா பெரும் ஆரவாரத்துடனும் பங்கேற்புடனும் வெற்றிகரமாக நடந்தேறியது. பல குழுக்களின் விதை அரங்கங்கள், துலா இயற்கை ஆடைகள், பெண்கள் குழுக்களின் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், பல வகைகளான அரிசி (நெல்லாகவும் அரிசியாகவும்) விற்பனைக்கும் பார்வைக்கும் வைக்கப்பட்டு, மிக சிறப்பாக இருந்தது. உள்ளூர் பல்வேறு பெண்கள் குழுக்கள் பங்கு பெற்ற சமையல் போட்டியும் ஒரு பெரும் ஈர்ப்பு. பல வகாயான உணவு பொருட்கள், பாரம்பரிய மாற்றும் மிகவும் புதுமையான உணவு வகைகள் கொண்டு எல்லோரையும் அசத்தினர். இது பலா பழ பருவம். பலா சுளை மற்றும் கொட்டையிலிருந்து அல்வா முதல் அதிரசம் வரை 20க்கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் கார வகை உணவுகள் செய்யப்பட்டு கட்ட்சிக்கும் விற்பனைக்கும் இருந்தது ஒரு பெரும் சிறப்பு. ஒரு புடவையை மடித்து சிறு டப்பாவில் (தீப்பெட்டியில்!) கொண்டு சென்றனர் என நாம் படித்திருக்கிறோம். அப்படி சிறையிலிருந்து தப்பித்தவர்களை பற்றியும் படித்திருக்கிறோம். ஔரங்கசீப் ஒரு முறை தொலைவில் தனது மகள் மிகக்குறைந்த ஆடை அணிந்திருக்கிறார் என்று சினந்து அவரை தனது அறைக்கு அழைத்த பொழுது தான் தெரிந்தது அவர் 7 அடுக்குகள் நிறைந்த டாக்கா மஸ்லின் ஆடை அணிந்திருந்தார் என்று! ஒரு மோதிரத்திற்குள் ஒரு புடவை செலுத்தப்பட முடியும் (இதனை அக்காலத்து ஆங்கில பத்திரிக்கை வெளியிட்ட புகைப்படம் இன்றும் உள்ளது!) இப்படி பல பெருமைகள் நிறைந்த மஸ்லின், பல கொடுமைகளையும் கண்டது. இப்படி மிகவும் நேர்த்தியாக நெய்யப்பட்ட ஆடைகள், அவர்களது இயந்திரங்களால் நெய்ய முடியவில்லை என்ற பொறாமையாலும், தங்களது வியாபாரத்தை பெருக்கவும் ஆங்கிலேயர்கள் வங்காளத்தில் பலரது கட்டை விரலை துண்டித்த வரலாற்றை நம்மில் பலரும் மறந்திருக்கலாம்!(or அறிந்திருக்கலாம்). இன்று இந்த மஸ்லின் நமது பல பாரம்பரிய கலைகளையும் வாழ்வாதாரங்களையும் போல் அழிந்து வருகிறது. 82 வயதான ஒரு பாட்டியம்மா தான் இன்றைய இளமையான youngest (கையால்) நூல் நூற்பவர்! இன்று இதனை நாம் நுகர்வோராக, அரசாக, ஆர்வலராக, எதாவது ஒரு விதத்தில் மீட்டெடுக்க முனைய வேண்டும். அக்கரையின்றி அப்படியே விட்டு விட்டால், அப்புறம் நம்மால் அதனை மீட்கவே முடியாமல் போகலாம். மேலும் இதே போல், கையால் நூல் நூற்பது, கைத்தறி நெசவு எல்லாமும் அழிவை நோக்கி வேகாமாக போகின்றன. மகாத்மா காந்தியடிகள் காதியை நமது கிராம சுராஜ்ஜியத்திற்கு ஒரு பெரும் ஆயுதமாக பார்த்தார். உள்ளூர் பொருளாதாரத்தை வளர்க்கவும், ஊரக வழ்வாதாரங்களை காக்கவும், அண்மை வர்த்தகத்தை பெருக்கவும், பெண்கள் கையை மேம்படுத்தவும், decentralised (பரவலாக்கப்பட்ட?) பரந்த (distributed) பொருளாதாரத்திற்கும் இதனையே காந்தியும், குமரப்பாவும் பெரிதும் நம்பினர். இதன் அழிவு உள்ளூர் பொருளாதாரத்தையும், பெண்கள் விடுதலையையும், ஊரக வளர்ச்சியையும் நாசமாக்கி விட்டது. இந்த காரணங்களுக்காகவும், அந்த கலைகளை இன்றும் கையாளும் திறமை வாய்ந்த அந்த கலைஞர்களுக்காகவும், இப்படிப்பட்ட சிறந்த பருத்தி ஆடைகளை நாம் உடுத்தவும், இதனை ஊக்குவிக்க வேண்டும் நாமெல்லாம். ஆடைகளை நெய்யும் நூல்களை அதன் நுட்பத்தையும் மென்மைதன்மையையும் "எண்"களால் குறிப்பிடுவர். நமது சாதாரண காதி ஆடைகள் 30 என்றிருக்கும். 40 என்றால் மேலும் மென்மையாக இருக்கும். 100 என்றால் மிக மிக மென்மையாக நேர்த்தியாக இருக்கும். 100 ஆண்டுகளுக்கு முன்னாலேலே நமது திறமைவாய்ந்த கை நெசவாளர்கள் 500- 600 என்னும் கவுண்டில் (எண்ணில்) ஆடைகள் நெய்ய உலகமே அசந்தது. 1600 வரை இப்படி சென்றிருக்கிறார்கள் வங்களர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே! அப்படி 500ல் ஒரு சட்டை நெய்தால் மொத்த சட்டையும் 10 கிராம் இருக்கும். மின்விசிறிக்காற்றில் பறந்து விடும்! இப்பொழுது புரிகிறதா ஔரங்கஸீப் எப்படி ஏமாந்தார் என்று! அப்படிப்பட்ட மஸ்லினையும் பொதுவாக கைத்தறியையும், கையால் செய்யப்படும் எல்லா கைவினை பொருட்களையும் நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். மீட்டெடுக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை! பல காரணிகள் உண்டு. பருவ மாற்றம் முதல், தேர்ந்த நபர்கள் வரை. நான் சென்று பார்த்த போது 82 வயதான மூதாட்டியே இருந்ததில் இளமையான நூல் நூற்கும் கலைஞர். அந்த திறனை நாம் பலருக்கும் (முக்கியமாக இளைஞர்களுக்கு) எடுத்துச்செல்ல வேண்டும். அவர்களிடம் பெசும் போது இதன் அகலம் என்ன என்று (36" அ 45" என்று தெரிந்து கொள்ள) கேட்ட போது, அவர்கள், குளிர் காலத்தில் 45' செய்ய முடியும், இப்பொழுது கோடைகாலத்தில் 36" தான் நெய்ய முடியும் என்றனர்! மேலும் இவர்கள் விடிகாலை 3 மணிக்கு எழுந்து, அந்த நேரத்தில் தான் நூற்பதற்கு சில ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நெய்வதற்கும் விடி காலை எழுந்து சில சரியாஅன பாரம்பரிய வகை அரிசியிலிருந்து கஞ்சி காய்த்து நூலுக்கு வார்த்தால் தான் நெய்ய சரியாக இருக்கும். இவ்வளவு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். அப்படி சுற்றுசூழலுடுன் பிண்ணிப்பிணைந்தது இந்த கலை. இன்று பருவ மாற்றம், சரியான கலைஞர்கள் இல்லாமை, இதில் பொருளாதாரம் இல்லாமை, அந்த அரிசி ரகங்கள் இல்லாமை என பல இல்லாமைகள்! (தமிழகத்தில் டாஸ்மாக்கினால் நெசவாளர்களுக்கு காலில் வலிமை இல்லாமை என்பது வேறு கதை!) இவற்றை மீட்டெடுக்க நமது துலா இப்பொழுது சில குழுக்களுடன் வங்காளத்தில் பிரயத்தனப்படுகிறது. இங்கு நமது சென்னை மாநகருக்கு அந்த பாரம்பரிய கலை நயம் மிகுந்த மஸ்லினை கொண்டு வந்து பிரபல படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறது. அதன் முதல் கட்டமாக அவ்வாறு நெய்யப்பட்ட மஸ்லின் ஆடைகளை இப்பொழுது நமது சென்னை நகருக்கு கொண்டு வருகிறது. ஆம்- ஒரு 3 நாள் கண்காட்சி ஜூன் 3,4 5 அன்று ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோடில் சி.பி ஆர்ட்ஸ் சென்டரில் ஏற்பாடு செய்துது. துலா (சென்னை- மானாவாரி நாட்டுப்பருதியிலிருந்து கையில் நூல் நூற்று, கைத்தறியாக நெய்து, இயற்கை சாயங்களுடன் தைக்கப்பட்ட ஆடைகள்) , ப்ரயோக் (பெங்களூரூ, இயற்கை பருத்தியிலிருந்து யோகா ஆடைகள்), மல்கா (ஹைதராபாத், பருத்தியிலிருந்து ஆடை வரை உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம்!), நேச்சர்ஸ் அலீ (பெங்களூரு, ஆடை வடிவமைப்பாளர் தாரா அஸ்லாமின் முயற்சி- கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு), மஹாத்மா காந்தி கிராமத்யோக் சேவா சன்ஸ்தானம் (கொல்கொத்தா, மஸ்லின் மற்றும் காதியை மீட்க பாடுபடும் குழு) என எல்லோரும் இணைந்து நடத்தும் இந்த கண்காட்சி உற்பத்தியாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே.
|
||
| Powered by LionWiki. Last changed: 2016/06/09 09:24 Erase cookies | Edit History | |