Main page
Recent changes
Syntax
History
bird2016jun
!!Asian Koel - Eudynamys Scolopacea (Linnaeus) [http://bsdinn.com/dl/bird.jpg] '''தோற்றம்''' காக்கையைப் போல் நீண்ட வாலுடன் இருக்கும். ஆணும், பெண்ணும் வேற்று நிறத்தில் இருக்கும். பெண் பறவை உடல் முழுவதும் பழுப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளிகளுடன் அமைந்திருக்கும். நீண்ட வாலில் பழுப்பு நிறத்துடன் வெள்ளைக் கோடுகள் அமைந்திருக்கும். ஆண் பறவை உடல் முழுவதும் கருமை நிறத்தில் இருக்கும். இரு பறவைகளுக்கும் கண்கள் பவள நிறத்தில் பளபளப்புடன் இருக்கும். மூக்கும்,கால்களும் பழுப்பு நிறத்தில் இருக்கும். நீளம் 39 முதல் 46 செ.மீ வரை இருக்கும். எடை 190 முதல் 300 கிராம் வரை இருக்கும். '''காணும் இடம்''' ஆசியா முழுவதும் இப்பறவையைக் காணலாம். இவை தோட்டங்களில், சிறிய காடுகளில், அடர்த்தியான மரப் புதர்களில் அதிகமாகக் காணப்படும். '''உணவு''' பெரிய பழங்கள் மற்றும் சிறிய பழங்கள் (சர்க்கரை பழங்கள்) அதிகமாக உண்ணும். அவ்வப்போது புழு, பூச்சிகளைப் பிடித்து உண்ணும். '''இனப்பெருக்கம்''' இனப்பெருக்க காலம் சித்திரை முதல் ஆடி வரை. குயில்கள் கூட்டைக் கட்டாது. பெரும்பாலானவை காகத்தின் கூட்டில் முட்டை இடும். ஆண் குயில் காகத்தை திசை திருப்பும் போது பெண் குயில் கூட்டில் முட்டை இடும். குயிலின் முட்டை காக்கை முட்டை போலவே இருக்கும். ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடும். மற்ற காக்கை முட்டைகள் குஞ்சு பொறிப்பதற்கு முன் குயில் முட்டைகள் குஞ்சு பொறித்துவிடும். காக்கை இறையைத் தேடி அதற்கு ஊட்டுவதுடன் பெண் குயில் அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் இறையை ஊட்டும். ஆண் குயில் குஞ்சு வளர்ப்பதில் ஈடுபடாது. '''குறிப்பு''' 1. மிக அழகாக இசை பாடும் பறவை 2. புதுச்சேரியின் மாநிலப் பறவையாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. 3. இவை குளிர்காலங்களில் பாடாது. கோடைகாலங்களில் தான் இவை பாடத்தொடங்கும். கோடைகாலங்கள் முடிந்து மழைக்காலம் தொடங்குவதற்கு முன் அதிகமாகப் பாடும். கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும். 4. வடமொழியில் இது கோகிலா அல்லது அன்னிய-வாபா ( anya-vapa) என்று அழைக்கப்படுகிறது. பிறரால் வளர்க்கப்பட்டது என்பதே இதன் பொருள். 5. ஆண்டாள், மாணிக்கவாசகர் இருவருமே குயிலைக் கடவுளுக்குத் தூது செல்லப் பாடியிருக்கின்றனர். 6. குயிலின் குரல் கர்நாடக சங்கீதத்தில் சா, பா, சா கடந்து மேல் பா (மேல் பஞ்சமம்) எட்டும் ஒலி; எனவேதான் இதன் மிழற்றல் மிகுந்த இறைஞ்சும் தன்மையுடையதாக உள்ளது. 7. பாரதியின் குயில்பாட்டுப் படிக்காதவர்கள் தமிழ் தெரிந்திருப்பதே வீண்!
Password
Summary of changes
Powered by
LionWiki
. Last changed: 2016/06/09 07:44
Erase cookies
Syntax
History